கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய் மகன் சஞ்சய் – கவலையில் குடும்பத்தினர்

vijay son sanjay, actor vijay son in canada, corona virus in canada, corona canada, சஞ்சய், விஜய், கொரோனா

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் நடிகர் விஜய் வெளிநாட்டிலிருக்கும் தனது மகனை நினைத்து மன வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளன. திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பெஃப்சி ஊழியர்கள், துணை நடிகர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்.

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை – நடந்தது என்ன?

ஆனால் இதுவரை நடிகர் விஜய்யிடம் இருந்து உதவிகள் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்துவரும் தனது மகன் ஜேசன் சஞ்சயை நினைத்து வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜேசன் சஞ்சய் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்நாட்டில் ஜுன் 1-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் ஒரு மில்லியன் வேலை இழப்புகள் – 44 ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சி