உக்ரைனில் இருந்து வரும் குழந்தை புற்று நோயாளிகளை டொரன்டோ SickKids மருத்துவமனை ஏற்றுக்கொண்டது – துன்பத்திலும் வலிமையாக இருக்கும் குழந்தைகள் குறித்து மருத்துவர் விளக்கம்

ukraine flags sale in ottawa

உக்ரைன் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செயல்பாடுகளை நடத்திவரும் ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்பினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கனடாவின் டொரண்டோவில் உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

உக்ரேனில் இருந்து வெளியேறி வரும் அதிகமான குழந்தை புற்றுநோயாளிகளுக்கு இடமளிக்க முடியும் என்று டொரண்டோவின் SickKids மருத்துவமனை தெரிவித்துள்ளது. SixkKids மருத்துவமனை மேலும் மூன்று குழந்தைகளையும் அவர்களின் பராமரிப்பாளர்களையும் போலந்தில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை வரவேற்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டாவது மாதத்திற்குள் நுழைவதால் பல உக்ரேனியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் .

SickKids Oncologist மருத்துவர் சுமித் குப்தா டொரன்டோவிற்கு விமானத்தில் வந்து சேர்ந்தார்.மேலும் இது போன்ற துன்பங்களை அனுபவிக்கும்போது குழந்தைகள் எவ்வளவு வலிமையாக இருக்கிறார்கள் என்பது தன்னை கவர்ந்தாக கூறினார்.
கடந்தவாரம் உக்ரைனில் இருந்து தனது முதல் இரண்டு குழந்தை புற்று நோயாளிகள் டொரன்டோ மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர்.

இது மருத்துவமனை எதிர்கொண்ட மிகவும் சிக்கலான சவால்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. நெருக்கடியின்போது இந்த மாத தொடக்கத்தில் குழந்தைகளுக்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட குழந்தைகளை தங்கள் மருத்துவமனைக்கு மாற்ற உதவுவதாக SickKids அறிவித்தது .