உலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு! ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய பொறுப்பு!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், இடம்பெறுவதற்கான நான்கு ஆண்டு கால  முயற்சியில் கனடா தோல்வி கண்டுள்ளது.

முதல் வாக்குப்பதிவில் நார்வே மற்றும் அயர்லாந்திடம் கனடா தோற்றது. இதன்மூலம், பாதுகாப்பு சபையில் இரண்டு இடங்களுக்கான போட்டியில் கனடா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஆதரவு அவசியமாகும். இதில் கனடா 108 வாக்குகளுடன் தோற்றது.

நார்வே 130 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அயர்லாந்து 128 வாக்குகளை பெற்று இரண்டாம் இடமும் பிடித்துள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், இது கனடாவின் தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாகும்.

2010 ஆம் ஆண்டை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms