லாட்டரியில் தமிழருக்கு கிடைத்த பல கோடி – அதிர்ஷ்டம் ஒரு நாள் கதவைத் தட்டினாலும் இப்படி இருக்கணும்

lottomax lottery winner tamilan in brampton canada

கனடாவின் பிராம்டன் நகரில் வசித்து வந்த தமிழர் ஒருவருக்கு மிகப்பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளது. கனடாவில் 30 ஆண்டுகளாக லாட்டரி விளையாட்டில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவருக்கு அவரது கனவு நினைவாகும் வகையில் பல கோடிகள் லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது.

54 வயதுடைய மனோகரன் பொன்னுத்துரை என்பவர் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக லாட்டரி விளையாடி வருகிறார். ஒண்டாரியோ மாகாணத்தின் பிராம்டனைச் சேர்ந்த இவர்,என்றேனும் ஒரு நாள் அதிர்ஷ்டமான லாட்டரி சீட்டின் மூலம் ஒரு மிகப்பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என்று கனவில் இருந்த மனோகரன் பொன்னுத்துரையின் நீண்ட நாள் கனவு தற்பொழுது நினைவாகி உள்ளது.

சிறிய உற்பத்தி நிறுவனத்தை நடத்திவரும் மனோகரன் லோட்டோ மேக்ஸ் ஜாக்பாட்டில் $70 மில்லியன் டாலர்களை பரிசாக பெற்றுள்ளார். தற்போது பல கோடிகளுக்கு அதிபர் ஆன பின்னரும் தனது தொழில் மற்றும் பணியினை தொடர்ந்து செய்யப்போவதாக கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டொரண்டோவில் உள்ள OLG பரிசு மையத்தில் ஜாக்பாட்டின் காசோலையை மனோகரன் பெற்றுக்கொண்டார். காசோலையை பெற்றுக் கொண்டபோது, “ஒருநாள் பெரிய வெற்றியைப் பெறவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், தற்பொழுது என் கனவு நினைவாகி உள்ளது ” என்று அவரது மகிழ்ச்சியை தெரிவித்தார் .

மனோகரன் நடத்திவரும் உற்பத்தி நிறுவனத்தை நம்பி பல பணியாளர்கள் உள்ளதால் தொழிலை கைவிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் பரிசுத் தொகையை வைத்து முதலில் வீடு கட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.