ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட கனடிய பிரதமர் – கோபமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

trudeau speech at europe parliament

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஐரோப்பிய பாராளுமன்றம் மற்ற பாராளுமன்றம் போல் இல்லை. கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் தலைநகர் ஒட்டாவாவில் covid-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளை எதிர்த்து லாரி ஓட்டுனர்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து உரையாற்றினார். ஜனநாயகத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்த போது ,தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

COVID-19 தடுப்பூசி ஆணைகளுக்கு எதிரான Freedom Convoy போராட்டம் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுனர்களால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்றது. போராட்டக்காரர்களின் முற்றுகைகளுக்கு பதிலளிக்கும் விதமாக சிவில் உரிமைகளை மீறியதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வலதுசாரி மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு உறுப்பினர்களால் பொதுமக்கள் கண்டனம் செய்வது இணையதளங்களில் வைரலானது.

பிரதமரின் லிபரல் அரசாங்கம் பிப்ரவரியில் நடைபெற்ற Freedom Convoy போராட்டத்தை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை அறிவித்தது. போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு அசாதாரண அதிகாரங்களை வழங்கியது.

ஒட்டாவா நகரின் மையப் பகுதியை ஆக்கிரமித்திருந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றும் போது ,49 வயதுடைய பெண் ஒருவர் ,டொரன்டோ காவல்துறை அதிகாரியால் பலத்த காயம் அடைந்ததாக புகார் அளித்ததை அடுத்து ,சிறப்பு புலனாய்வு பிரிவு பிப்ரவரி 20 அன்று விசாரணையை தொடங்கியது.