குடியுரிமை விண்ணப்பங்கள் இலவசம் – கனடாவில் குடியேற விரும்புபவர்களை வரவேற்கும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

CERB
Canadian Prime Minister Justin Trudeau speaks during a Covid-19 pandemic briefing from Rideau Cottage in Ottawa on November 20, 2020. (Photo by Lars Hagberg / AFP)

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் புதிய குடிவரவு துறை அமைச்சர் சீன் ஃபிரேசருக்கு கடிதம் எழுதினார். பிரதமர் எழுதிய கடிதத்தில் சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர வாழிட வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் கனடாவில் குடியேறுவதற்கான குடியேற்ற விண்ணப்பங்களை செயலாக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

குடியேற்றத்திற்கான பல வழிகாட்டுதல்களையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அகதிகளுக்கான குடியேற்ற ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென்று பிரதமர் கூறியுள்ளார்.குடிவரவு துறை கவனம் செலுத்தவேண்டிய 13 நடவடிக்கைகளை கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.

குடும்பங்களை மீண்டும் ஒருங்கிணைத்தல் ,covid-19 காரணமாக குடியேற்ற செயல்பாடுகளில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் மற்றும் மருத்துவத் துறைகள் போன்ற முக்கியமான துறைகளுக்கு திறமையான தொழிலாளர்களை நியமிப்பது போன்ற செயல்திட்டங்களையும் பிரதமர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வழிகாட்டுதல்கள் கனடாவின் கூட்டாட்சி மற்றும் மாகாணங்கள் அளவில் குடியேற்ற செயல்முறைகளில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவிற்கும் கனடாவின் நட்பு நாடுகளுக்கும் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து ஆதரவளித்த பெண்கள், தனிநபர்கள் ,LGBTQ நபர்கள் ,பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் அகதிகளின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை விண்ணப்ப செயல்முறையை பெறுவதற்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்துள்ள நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் கடிதத்தில் கூறியுள்ளார்.