கனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை! மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்!

கொரோனா பாதிப்பின் காரணமாக, வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ கனேடிய அரசு அவசரகால நிதிஉதவி திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இதில் மோசடி செய்து கொரோனா அவசர நிதியுதவி கோருவோர், 5,000 டாலர்கள் வரைக்கும் அபராதம் செலுத்தவேண்டிவரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான சட்டமுன்வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதற்கான தண்டனைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

போலியான விண்ணப்ப கோரிக்கை, சரியான வருவாயை தெரிவிக்க தவறுதல், தனக்கு நிதியுதவி கோர தகுதி இல்லை என்று தெரிந்தும் உதவி பெறுதல், உண்மைகளை மறைத்தல் ஆகிய குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த குற்றங்களுக்கு தண்டனையாக 5,000 டாலர்கள் வரை அபராதம், அல்லது ஏமாற்றி பெறப்பட்ட தொகையை விட இருமடங்கு தொகை திருப்பிக் கொடுத்தல் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.

குற்றத்தின் தன்மையை பொறுத்து ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.