கனடாவின் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா – சீனாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது

india got first place china second

கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 4,50,000 புதிய கல்வி அனுமதிகள் கனடாவில் வழங்கப்பட்டது . இது 2015 -இலிருந்து சுமார் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2019 இல் நிறுவப்பட்ட சாதனையை எளிதில் முறியடித்தது.

கனடாவின் கல்வி அனுமதிகள் மூலம் பயன் அடைபவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள் ஆவர். இந்திய மாணவர்களுக்கு 217410 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்தியா மிகப்பெரிய பயனாளியாக முதலிடத்தில் உள்ளது.105265 கல்வி அனுமதிகளை பெற்று சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

2020 மார்ச் மாதம் Covid-19 வைரஸ் தொற்று உலகெங்கிலும் பரவத்தொடங்கியதிலிருந்து 255000 கல்வி அனுமதிகளை கனடா வழங்கியுள்ளது.கிட்டத்தட்ட 622000 சர்வதேச மாணவர்கள் டிசம்பர் மாத நிலவரப்படி கனடாவில் இருந்தனர். 2019 ஆம் ஆண்டு சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 640000 -ஆக இருந்தது.

கனடாவில் பயனடையும் சர்வதேச மாணவர்களின் முதல் ஐந்து நாடுகள் :

  • இந்தியா(217410)
  • சீனா(105265)
  • பிரான்ஸ்(26630)
  • ஈரான்(16900)
  • வியட்நாம் (16285)

Covid-19 கட்டுப்பாடுகளை நீக்கியது முக்கியமாக சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதிகளை மீட்டெடுப்பதற்கு ஆகும்.

Covid-19 தொற்று நோய்க்கு முன் குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா தொலைதூரக் கல்வியை தகுதிக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் கனடிய படிப்பு திட்டங்களை தொடர விரும்புவோருக்கு உதவுவதற்காக ஆகஸ்ட் 31 2022 வரை கொள்கையை தற்காலிகமாக தளர்த்தி உள்ளனர்.கனடாவின் அங்கீகரிக்கப்பட்ட கற்றல் நிறுவனத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் PGWP அனுமதியை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.