ரஷ்யாவிற்கு எதிராக அடுத்தடுத்த பொருளாதார தடைகளை விதிக்க கனடா மற்றும் அதன் நட்பு நாடுகள் திட்டம் – NATO தலைவர்களுடன் கனடிய பிரதமர் சந்திப்பு

Canada Suspends NATO Mission In Iraq
Canada Suspends NATO Mission In Iraq

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரஷ்யா-உக்ரேன் இடையேயான போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் உக்ரைனில் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கும் ஒரு தீர்வை கண்டறிவதை நோக்கமாக கொண்ட தனது சக NATO தலைவர்களுடன் இன்று சந்தித்துப் பேசினார்.

ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதல் ஐரோப்பாவை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ட்ரூடோ நேற்று வாதிட்டார்.

” நட்பு மிக்க ஜனநாயகத்தின் மீதான சட்டவிரோத இரக்கமற்ற படையெடுப்பு” என்று பிரதமர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரிக்கும் மதிப்புகளுக்காகப் போராடும் உக்ரேனியர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் ,ரஷ்ய அதிபர் Vladimir Putin -ஐ கண்டிப்பதில் NATO ஒன்று பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரஷ்ய அதிபரின் நட்பு நாடுகளுக்கு எதிராக கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இன்று அடுத்தகட்ட பொருளாதார தடைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரேனிய அதிபர் Volodymyr Zelenskyy இந்த வார தொடக்கத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் நேரடியாக பேசிய பின்னர் NATO தலைவர்களிடம் உரையாற்ற உள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதமர் ட்ரூடோ ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் சென்று கூட்டங்களை நடத்தினார். மேலும் லாட்வியாவில் NATO பன்னாட்டு போர்க்குழுவை வழிநடத்தும் கனடிய துருப்புக்களை பார்வையிட்டார்