கனடாவில் ஒரு மில்லியன் வேலை இழப்புகள் – 44 ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சி

Coronaviru Canada lost a record one million jobs in March

கொரோனா வைரஸ் காரணமாக, கனடாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடா மக்கள் வேலை இழந்துள்ளனர்.

கனடா அரசின் Statistics நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவின் படி, வேலையின்மை விகிதம் 7.8% ஆக உயர்ந்துள்ளது.

கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சருக்கு கொரோனா உறுதி

1976 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒரே மாதத்தில் மிகப்பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்பட்டிருப்பது இதுதான் முதல் முறை.

கனடா இந்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்பு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடிமக்களுக்கு “நாட்டின் ஒரு கடினமான நாளுக்கு” தயாராகுமாறு எச்சரித்தார்.

புள்ளிவிவரங்கள் படி, கனடா நாடு முழுவதும் 1,011,000 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன, இது வேலையின்மை விகிதத்தை கடந்த மாதத்தை விட 2.2% முதல் 7.8% வரை அதிகரித்துள்ளது.

பிப்ரவரி வேலையின்மை விகிதம் 5.6% ஆக இருந்தது.