“எங்களுக்காக ஏதாவது செய்யுங்கள் ” ஆப்கானிஸ்தானில் பெண் அமைச்சர்கள் வேண்டுகோள் – கனடா பதில்

canada afghanistans
afghanistan women

ஆப்கானிஸ்தானை முழுவதும் தாலிபன்கள் கைப்பற்றியதால் மக்கள் அனைவரும் பிற நாடுகளுக்கு புலம்பெயரும் முயற்சியில் ஈடுபட்டனர். தாலிபன் அமைப்பு பெண்களுக்கான உரிமைகளை மறுத்தல் வன்முறை தாக்குதல் போன்றவற்றை ஆதரிப்பதால் ஆப்கானியர்களுக்கு ஆப்கானிஸ்தானில் வாழ்வதற்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

விமானங்களின் உதவியுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து கனடாவின் தூதரக அதிகாரிகள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் போன்றவர்களின் குடும்பங்கள் கனடாவிற்கு கொண்டுவரப்பட்டனர்.ஆப்கானிய மக்கள் பலரும் அகதிகளாக கனடாவிற்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

ஆப்கானிய அகதிகளுக்கு உதவும் கனடா – தாலிபான்களின் நடவடிக்கைகள்

தற்போது ஆப்கானிஸ்தானில் பெண் அமைச்சர்கள் தலைநகர் காபூல் தாலிபான்களால் கைப்பற்றபடுவதற்கு முன்பு பெண்களின் உரிமைகளுக்கான தடை மற்றும் வன்முறைக் கொடுமைகள் போன்றவற்றை கனடிய அரசியல்வாதிகளிடம் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு உதவி செய்யுமாறு கனடிய அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடிய அமைச்சர்கள், செனட்டர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கனடா – ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற ஜூம் சந்திப்பின்போது இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.”எங்களுக்காக ஏதாவது செய்யுங்கள் ” என்று பெண் அமைச்சர்கள் தொடர்ந்து உதவி கேட்டதாக இரண்டு கூட்டங்களிலும் கலந்துகொண்ட அதாவுல்லாஜான் கனடிய அரசியல்வாதிகளிடம் தெரிவித்தார்.

“தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் அரசாக அங்கீகரிப்பதற்கு கனடாவிற்கு ஒருபோதும் திட்டமில்லை. ஆப்கானிய பெண்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க தாலிபான்களை எதிர்த்து போராடியதை கனடா அங்கீகரிக்கிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கானிய மக்களுக்கு எங்களால் முடிந்த ஆதரவை தொடர்ந்து அளிப்போம், முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்” என்று உலகளாவிய கனடாவின் செய்தி தொடர்பாளர் ஜான் பாப் காக் பதிலளித்தார்.