‘சாதனைக்கு ஊனம் தடையில்லை’: கனடாவில் சாதித்த ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி கோல்ப் வீரர்

சாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கனடாவை சேர்ந்த ஒரு கையை மட்டுமே கொண்ட மாற்றுதிறனாளி வீரர் ஒருவர் கோல்ப் விளையாட்டில் அசத்தி வருகிறார்.

61 வயதாகும் அவரின் பெயர் லாரன்ட் ஹர்டுபைஸ் ((Laurent Hurtubise)) ஆகும். குழந்தையாக பிறந்தபோதே அவருக்கு இடது கை மட்டுமே இருந்தது. ஊனத்தை கண்டு முடங்கி விடாமல் 11 வயது முதல் கோல்ப் விளையாடி வருகிறார்.

கனடா நாட்டின் தேசிய கொடியில் இடம் பெற்றுள்ள இலையின் வரலாறு தெரியுமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற முதல்தர போட்டியில், நீண்ட தொலைவிலிருந்த குழியில் பந்தை ஒரே அடியில் தள்ளி அனைவரையும் அசத்தினார்.

“கோல்ஃப் மைதானத்தில் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த அனுபவம் இதுதான்” என்று லாரன்ட்டின் சக விளையாட்டு டிராய் மெரிட் PGATour.com இடம் கூறினார்.

Coronavirus: சீனாவில் இருந்து வரும் ஒவ்வொரு பயணிக்கும் முழு சோதனை – உச்சக்கட்ட உஷாரில் கனடா