கனடா நாட்டின் தேசிய கொடியில் இடம் பெற்றுள்ள இலையின் வரலாறு தெரியுமா?

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளது அரிய வகை மேபிள் மரம். இதன் இலையே கனடா நாட்டின் தேசிய கொடியில் இடம் பெற்றுள்ளது. மேபிள் மரம் ஆசியாவை பிறப்பிடமாக கொண்ட மரமாக உள்ளது.

Coronavirus: சீனாவில் இருந்து வரும் ஒவ்வொரு பயணிக்கும் முழு சோதனை – உச்சக்கட்ட உஷாரில் கனடா

எனினும், ஐரோப்பியாலும் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த வகை மரங்களில் வளரும் இலைகள் பல வண்ணங்களில் காணப்படும். 128 வகை கொண்ட இந்த மரங்களில் வளரும் இலைகள் இளஞ்சிவப்பு, பச்சை, பழுப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் காணப்படும்.

இந்த மரத்தின் இலைகள் கனடா நாட்டு கொடியில் இடம் பெற்றுள்ள சின்னமாகும். இந்த வகை மரங்கள் இந்தியாவில் மிக அரிதாகவே காணப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் இந்த வகை மரங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ளன.

இந்த மரத்தின் சிறப்பை அறிந்த சிலர், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். சிலர் இந்த மரத்தில் இருந்து விழுந்த இலைகளை சேகரித்து செல்கின்றனர்.

தற்போது குளிர் காலம் என்பதால், இந்த மரத்தில் பழுப்பு நிறத்தில் இலைகள் வளர்ந்துள்ளன. மரம் முழுக்க இலைகள் உள்ளதால், பெரிய புதர் போல் காட்சியளிக்கிறது.

சேதி தெரியுமா! உலகிலேயே சட்டப்பூர்வமாக கஞ்சாவை வியாபாரமாக்கிய முதல் நாடு கனடா