Coronavirus: சீனாவில் இருந்து வரும் ஒவ்வொரு பயணிக்கும் முழு சோதனை – உச்சக்கட்ட உஷாரில் கனடா

Canada News in Tamil: சீனாவில் வுஹான் மாகாணத்தில் ’கொரோனா’ என்ற வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சீன அரசு நாடியுள்ளது.

இது மூச்சு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியது. சளி, இருமல் போன்றவை தான் அறிகுறிகள் ஆகும். வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா முழுவதும் சுகாதாரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. சீனாவில் அடுத்த ஆண்டு புத்தாண்டு பிறக்க உள்ளது.

கருப்பு பெட்டியை கொடுக்க மாட்டோம் என அடம்பிடிக்கும் ஈரான்; விடாது துரத்தும் கனடா

இதையொட்டி அந்நாட்டில் இருந்து 1.4 பில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. எனவே ’கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதும் பரவும் சூழல் ஏற்படக் கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவில் வுஹான் மாகாணத்திற்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

எனவே சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ்

இந்நிலையில், கொரோனா வைரஸ் கனடாவில் பரவாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

சேதி தெரியுமா! உலகிலேயே சட்டப்பூர்வமாக கஞ்சாவை வியாபாரமாக்கிய முதல் நாடு கனடா

சீனாவில் இருந்து வரும் விமானங்களின் பயணிகள் ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சீனாவில் இருந்து தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவிவிட்டது. இதனால், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடாத குறையாக கனடாவுக்கு வரும் பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்கள்.