கனடாவுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

Canada Tamil News
Canada delhi

கனடாவுக்கு குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2019ஆம் ஆண்டு இருமடங்காக உயர்ந்துள்ளதாக திங்க் டங்க் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தால் குடியேற்றத்திற்கான கட்டுப்பாடுகள் அதிகரித்ததின் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை (NFAP) தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து இளவரசர் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்கக் கூடாது; கனடா மக்கள் கருத்து

80,685 இந்தியர்கள் கனடாவை நிரந்தர வசிப்பிடமாக கடந்த நவம்பர் 2019 வரை தேர்வு செய்திருந்தனர். இது 2016ஆம் ஆண்டில் குடியேறிய 39,705 பேரிடமிருந்து 105% அதிகரித்துள்ளது என்று கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை ஆகியவற்றின் தரவுகளை கொண்டுள்ள என்எப்ஏபி பகுப்பாய்வு அமைப்பு கூறுகிறது.

“அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் படிக்கவும், குடியேறவும் கனடாவை முன்பு எப்போது இல்லாத அளவில் ஒரே நேரத்தில் தேர்வு செய்வது தற்செயலாக நடைபெறும் சம்பவம் அல்ல. அமெரிக்காவில் குடியேற்றத்துக்கான கட்டுப்பாடுகள் அதிகரித்தால் குடியேற்றம் கடினமானதே இந்த மாற்றத்துக்கு காரணம்” என என்எப்ஏபி- யின் நிர்வாக இயக்குநர் ஸ்டூவர்ட் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் தரவுகள் கட்டமைக்கப்பட்ட விதம், எத்தனை இந்தியர்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக குடியேறினார்கள் மற்றும் எத்தனை பேர் அமெரிக்காவிலிருந்து வந்தார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம் – தமிழக பாஜகவின் வானதி சீனிவாசன் பங்கேற்பு

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களின் குடியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவேன் என்பதை தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார். அதன்படி, அவர் பதவியேற்ற பின் குடியேற்ற விதிகளை கடுமையாக்கி, வேலை விசா உள்ளிட்ட குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் தொழில்நுட்ப வல்லுநர்களை பாதிக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.