இங்கிலாந்து இளவரசர் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்கக் கூடாது; கனடா மக்கள் கருத்து

images Credit - washington post
images Credit - washington post

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, கடந்த, 2018-ம் ஆண்டு, அமெரிக்க நடிகை மேகனை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு, ஆர்ச்சி என்ற, 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் அரசு குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகுவதாக, ஹாரி-மேகன் தம்பதி அறிவித்தனர். இதற்கு ராணி 2ஆம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர்.

கனடாவில் தமிழ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம் – தமிழக பாஜகவின் வானதி சீனிவாசன் பங்கேற்பு

வான்கூவர் தீவின் விக்டோரியா பகுதியில் வசித்து வரும் அவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் கனடா அரசு உள்ளது. எனினும், அதற்கு ஆகும் செலவை, கனடா அரசு ஏற்குமா, இல்லையா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஹாரி-மேகன் தம்பதியின் பாதுகாப்பு செலவுகளை, கனடா அரசு ஏற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, மக்கள் மத்தியில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில், ஹாரி-மேகன் தம்பதிக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளால் ஏற்படும் செலவுகளை, கனடா அரசு ஏற்கக்கூடாது என, 77 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். வெறும் 19 சதவீத மக்களே பாதுகாப்பு செலவுகளை அரசு ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம் – அசத்திய கிராமிய நடனக் குழு