கனடா Newfoundland மாகாணத்தில் பனிப்புயல் – மின்சாரமின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான வீடுகள் (வீடியோ)

கனடாவின் Newfoundland மாகாணத்தில் நேற்று முன்தினம்(ஜன.18) முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக பனிப்பொழிவின் காரணமாக வர்த்தக நிலையங்களை மூடுமாறும் மக்களை வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

பேஸ்புக் காதல் – கனடா ஆசிரியையை மணந்த மகாராஷ்டிர வாலிபர்

வீதிகளில் சுமார் 2 அடி வரை பனி படர்ந்துள்ளதுடன் வாகனங்களும் பனியினால் மூடப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

தமது ட்விட்டர் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள கனேடிய பிரதமர், தேவையேற்படும் பட்சத்தில் சகல உதவிகளையும் வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏற்பட்ட பனிப் புயல் நியூஃபவுண்ட்லேண்டின் தலைநகரான செயின்ட் ஜான்ஸில் 76.2 செ.மீ (30 அங்குலங்கள்) பனியைக் கொட்டியது, மேலும் 130 கிமீ / மணி (81 மைல்) வேகத்தில் காற்று வீசியது.

மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கனடாவில் 2020ம் ஆண்டில் இந்த வேலைகளுக்கு தான் அதிக சம்பளமாம்