கனடாவில் 2020ம் ஆண்டில் இந்த வேலைகளுக்கு தான் அதிக சம்பளமாம்

கனடாவில் 2020ம் ஆண்டில் தொழில்நுட்ப பிரிவில் என்ன மாதிரியான பணிகளுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறித்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

‘இனிய பொங்கல் வாழ்த்துகள்’ – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே (வீடியோ)

இதுகுறித்து CIC செய்தி நிறுவனத்துக்கு Randstad Canada-வின் பணியாளர்கள் பிரிவு தலைவர் பாட்ரிக் பௌலின் கூறுகையில், “டெக்னாலஜி துறையில் இங்குள்ள பணிகளுக்கு போதுமான திறமையான ஆட்கள் கிடைக்கவில்லை. பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

2020ம் ஆண்டில் டெக் துறையில் கீழ்கண்ட பிரிவுகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Developers and Programmers

Quality Assurance Analyst

Data Analyst

IT Business Analyst

Senior Software Engineer

Network Administrator

Technical Support Specialist

ஆகிய பணிகளுக்கு 2020ல் அதிக டிமாண்ட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு சராசரி சம்பளம், 81,750 ஆகும்.

இந்த துறையில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் சராசரியாக 55,000 டாலர் சம்பளத்தை எதிர்பார்க்கலாம். மேலும் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் 140,000 டாலர் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை வீட்டிற்கு கொண்டு செல்லலாம்.

ஹாரி – மேகன் தம்பதிக்கு உதவுவதில் இருந்து பின்வாங்குகிறதா கனடா?