ஹாரி – மேகன் தம்பதிக்கு உதவுவதில் இருந்து பின்வாங்குகிறதா கனடா?

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்குச் சுதந்திரம் தேவைப்படுவதால் அரச குடும்பத்திலிருந்து விலகி வட அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகவும் இங்கிலாந்து ராணி மற்றும் அரசுக்குத் தாங்கள் எப்போதும் உதவியாக இருப்போம் என்றும் கூறியுள்ளனர்.

கனடாவில் களைக்கட்டும் பொங்கல் திருவிழா – மிஸ் பண்ணிடாதீங்க

இளவரசர் ஹாரி மற்றும் மேகான் தங்களது ராஜ பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பின் இங்கிலாந்து ராணியின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் ஹாரிக்கும், மேகனுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் இருக்க விரும்பிய போதிலும், சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை மதிப்பதாகவும், புரிந்துகொள்வதாகவும் ராணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், பிரிட்டன் இளவரசரும், மேகனும் கனடாவுக்கு குடிபெயரும் பட்சத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக வாக்களித்ததில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, ஹாரி – மேகன் தம்பதி கனடாவுக்கு குடிபெயரும் பட்சத்தில், அவர்களது செலவின் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே உறுதியளித்ததாக கூறப்பட்டது.

ஆனால், கனடா நிதியமைச்சரான Bill morneau, வரி செலுத்தும் பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும் என்பதால், இதுகுறித்து இன்னமும் பெடரல் அலுவலகம் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பிரிட்டன் மகாராணி, இளவரசர் வில்லியம்ஸ் ஆகியோர் கனடா வந்திருந்த போது, அவர்களுக்கான பாதுகாப்பு செலவான சுமார் 2 மில்லியன் பவுண்டுகளை கனடா ஏற்றுக் கொண்டது.

ஆனால், ஹாரி – மேகன் ராஜ குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதால், முன்னாள் ராஜ குடும்ப உறுப்பினர்களாகி விடுவதால், அவர்களுக்கான இவ்வளவு பெரிய தொகையை, வரி செலுத்தும் கனடா மக்கள் விரும்புவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏர் கனடா பயணி திடீர் மரணம் – திருப்பிவிடப்பட்ட விமானம்!