ஏர் கனடா பயணி திடீர் மரணம் – திருப்பிவிடப்பட்ட விமானம்!

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த ஏர் கனடா விமானத்தில் பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக இறந்ததால், ஹோனுலுலுவுக்கு திருப்பிவிடப்பட்டது.

கிறிஸ்டோபர் வுட்கட் எனும் 38 வயது மதிக்கத்தக்க விமான பயணத்தின் போதே இறந்துவிட்டதாக,ஹோனுலுலு மெடிக்கல் எக்ஸாமினர்ஸின் நிர்வாக அதிகாரி கிரா பைவா-கிமுரா தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வான்கோவரில் இருந்து வந்த விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்றது. திடீரென மருத்துவ அவசரநிலை காரணமாக ஹோனுலுலுவுக்கு திருப்பி விடப்பட்டதாக ஏர் கனடா செய்தித் தொடர்பாளர் பீட்டர் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறியுள்ளார்.

“வாடிக்கையாளரின் பிரைவசி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால், தாங்கள் அவரது மருத்துவ விவரம் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை” என்று ஏர் கனடா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.