கனடாவில் களைக்கட்டும் பொங்கல் திருவிழா – மிஸ் பண்ணிடாதீங்க

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் பண்டிகை காலத்தின் போது தான் தாய் நாட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பிளைட் இந்தியாவில் லேண்ட் ஆகும் போதும், சொந்த ஊரில் கால் வைக்கும் போதும் மனதுக்குள் ஒரு அதிர்வு ஏற்படும் பாருங்க… அந்த அதிர்வு இதயம் வழியாக தலைக்கு ஏறி, கண்ணுக்குள் நுழைந்து கண்ணீராக வெளிவந்து நிற்கும். நாம கண்ணு வேர்க்குது மோடில் சைடாப்புல துடச்சிட்டு போவோம்… அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

மழையால் கனடாவில் விமான சேவை பாதிப்பு – ஹெல்ப்லைன் நம்பர் இதோ

ஆனால், சோகம் என்னென்னா, சிலருக்கு அந்த வாய்ப்பு கூட கிடைப்பதில்லை என்பது தான். வேலை பார்க்கும் நாட்டிலேயே பண்டிகைகளை கடந்து செல்வது கொடுமையிலும் கொடுமை. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு குடும்பத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு வாழும் தமிழ் நண்பர்களின் நெஞ்சம் உண்மையில் இரும்பை விஞ்சும்.

சிலரோ, இந்த எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, தாங்கள் வாழும் நாட்டிலேயே மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடி விடுவார்கள். இதனால், வெளிநாடுகளில் தமிழ் பண்டிகைகளின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியது.

அந்த வகையில் கனடாவில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

கனடாவில் வான்கோவர் தீவில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக களைக்கட்டியுள்ளது. அங்கு VITS என்று அழைக்கப்படும் வேன்கோவர் தீவு தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற உள்ளது.

ஞாயிறு , 19 ஜனவரி 2020
11:00 – வரவேற்பு
12:30 – மதிய உணவு
14:30 – கலாச்சார நிகழ்வுகள்
16:00 – தேநீர் நேரம்
16:30 – இறுதி கொண்டாட்டம்

என்று டைம் டேபிள் போட்டு கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.

பொங்கல் பயணம் – ஏர் கனடாவில் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

கனடாவில் டொரோண்டோவில் நடைபெற்ற இளம் சிறார்களின் பொங்கல் அரங்கேற்ற நிகழ்வு.

அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகையை அங்கீகரித்த முதல் கனடா நகராட்சி மார்க்கம் தான் இங்கு, ஜனவரி 13, 14 மற்றும் 15 தேதிகளை தமிழ் பாரம்பரிய நாட்கள் / தமிழ் புத்தாண்டு / தை பொங்கல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

மார்க்கம் தை பொங்கல் விழா, கனடாவில் மிகப்பெரிய தமிழ் பாரம்பரிய கொண்டாட்டமாக இன்றும் தொடர்கிறது.

இப்படி உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் சொந்த ஊரில் கொண்டாட முடியாத தங்கள் பண்டிகைகளை வாழும் நாட்டிலேயே முடிந்தளவு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கிறோம்… எதற்கு தமிழ் பண்டிகையை இங்கு கொண்டாடிக்கிட்டு என்ற எண்ணம் இல்லாமல், எப்பாடுபட்டாவது சம்பந்தப்பட்ட அரசின் அனுமதியோடு தமிழர்களின் கலாச்சாரத்தை அங்கும் நிலைநாட்டி வருவது நமக்கு பெருமை தானே!.