‘இனிய பொங்கல் வாழ்த்துகள்’ – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே (வீடியோ)

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தை மாதம் முதல்நாளை முன்னிட்டு நேற்று பொங்கல் திருநாள் ஆரம்பமானது. இன்று மாட்டுப் பொங்கள் தினம் மற்றும் திருவள்ளுவர் தினம் ; நாளை காணும் பொங்கல் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தை முதல் நாள் பொங்கல் பண்டிகையொட்டி கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார். தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.