பேஸ்புக் காதல் – கனடா ஆசிரியையை மணந்த மகாராஷ்டிர வாலிபர்

கனடா நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 24). சிறுகதை எழுத்தாளராக உள்ளார். அதேசமயம், கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வைபவ் (24) என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மனம் விட்டு பழக, நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.

கனடாவில் 2020ம் ஆண்டில் இந்த வேலைகளுக்கு தான் அதிக சம்பளமாம்

ஒருக்கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து, பெற்றோர்களிடம் தங்கள் காதல் குறித்து தெரியப்படுத்தினர். தொடக்கத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும், முடிவில் பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர்.

இதனையடுத்து இவர்களின் திருமணம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணாநகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி நடந்தது. மாப்பிள்ளை வைபவ் வேட்டி சட்டையும், ஜோஸ்பின் பட்டு சேலையும் அணிந்திருந்தனர். இதையடுத்து மேளதாளம் முழங்க மாலை மாற்றி திருமணம் நடந்தது.

விழாவில் கிராம மக்கள், இருவீட்டார் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சைவ விருந்து பரிமாறப்பட்டது.

ஹாரி – மேகன் தம்பதிக்கு உதவுவதில் இருந்து பின்வாங்குகிறதா கனடா?