இன்டர்நெட்டில் உலவும் High Commission Of India போலி இணையதளம் – கனடா தமிழர்களுக்கு எச்சரிக்கை

High Commission Of India to canada
High Commission Of India to canada

கனடாவுக்கான ஹை கமிஷன் ஆஃப் இந்தியா அலுவலகம் ஒட்டாவா நகரத்தில் உள்ளது. இங்கு, பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட இந்தியர்களுக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், இணையதளத்தில் High Commission Of India வலைத்தளம் போன்றே பல போலி வலைத்தளங்கள் உலா வருவதாக புகார்கள் குவிந்து வருகிறது. அதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

‘Tactical Pause’ – ஈராக்கில் நேட்டோ பயிற்சியை கலைத்த கனடா! அமெரிக்காவால் அடுத்தடுத்த திருப்பம்

ஒட்டாவாவில் உள்ள ஹை கமிஷன் ஆஃப் இந்தியா அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.hciottawa.ca

டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.cgitoronto.ca

வான்கோவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் இணையதளம் www.cgivancouver.org

இந்த சேவைகளை கனடாவில் உள்ள பி.எல்.எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய அரசு அவுட்சோர்ஸ் செய்துள்ளது, எனவே தேவைப்படும் தகவல்களை www.blsindia-canada.com இல் பார்வையிடலாம்.

போலி வலைத்தளங்களால் தவறாக / ஏமாற்றப்பட்ட விண்ணப்பதாரர்கள் உள்ளூர் இணைய குற்றச் சட்ட அமலாக்கப் பிரிவில் புகார் அளிக்கலாம்.

அதிகரிக்கும் பதற்றம்: ஈராக்கில் இருந்து கனடா மக்கள் வெளியேற அரசு அறிவுறுத்தல்