‘Tactical Pause’ – ஈராக்கில் நேட்டோ பயிற்சியை கலைத்த கனடா! அமெரிக்காவால் அடுத்தடுத்த திருப்பம்

Canada Suspends NATO Mission In Iraq
Canada Suspends NATO Mission In Iraq

Canada Tamil News: ஈரான் நாட்டு மக்களால் நாயகனாக கொண்டாடப்பட்டவரும், ஈரானிய புரட்சிகர காவல்படைத் தளபதியுமான மேஜர் ஜென்ரல் காஸ்ஸெம் சுலைமானி, கடந்த ஜன.3ம் தேதியன்று பாக்தாத்தில், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலால் கொல்லப்பட்டார்.

இதனால், ஈரான் முழுவதும் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. தங்கள் நாயகன் கொல்லப்பட்டதற்காக அமெரிக்க படைகள் மீது 35 இடங்களில் தாக்குதல் நடத்த இடம் குறிக்கப்பட்டுவிட்டதாக ஈரான் அறிவித்திருப்பது உலக நாடுகளை கவலை அடைய வைத்துள்ளது.

அதிகரிக்கும் பதற்றம்: ஈராக்கில் இருந்து கனடா மக்கள் வெளியேற அரசு அறிவுறுத்தல்

சுலைமானியின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரியாவிடை கொடுத்தனர்.

நேச நாடுகளிடம் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல், அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்தியா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இத்தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ள நிலையில், கனடா தன்நாட்டு மக்களை இராக்கில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், ஈராக்கில் செயல்பட்டு வந்த கனடாவின் NATO மிஷனை சஸ்பென்ட் செய்து கனடா உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை “Tactical Pause” என்று கனடா குறிப்பிட்டுள்ளது.

இந்த NATO மிஷன் கனடாவின் ஜென்ரல் ஜென்னி கரிக்னன் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மிஷன் மூலம், ஈராக் ராணுவத்திற்கு பயிற்சியும், அறிவுரைகளும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த NATO மிஷன் பயிற்சியில் மொத்தம் 253 கனடா வீரர்கள் பணியாற்றி வந்தனர். இதுதவிர ஈராக், குவைத், ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகள் முழுவதும் கிட்டத்தட்ட 600 கனடா வீரர்கள் தங்கியிருந்து பயிற்சியும், அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.

ஏடிபி கோப்பை டென்னிஸ்: கனடா அபார வெற்றி!