அதிகரிக்கும் பதற்றம்: ஈராக்கில் இருந்து கனடா மக்கள் வெளியேற அரசு அறிவுறுத்தல்

Canada Advises Its Citizens Leave Iraq
Canada Advises Its Citizens Leave Iraq

மேஜர் ஜென்ரல் காஸ்ஸெம் சுலைமானி, ஈரானிய புரட்சிகர காவல்படைத் தளபதி ஆவார். கடந்த வெள்ளியன்று, பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இவர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பின்னர், இந்த கொலைக்கு அமெரிக்கா பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

கனடா செல்ல Temporary Resident Visa விண்ணப்பிப்பது எப்படி? – முழு விவரம் இதோ

அதிபர் டிரம்ப்பின் உத்தரவின் பேரிலேயே சுலைமானியை கொன்றதாக பென்டகன் தெரிவித்திருந்தது.

இந்த குண்டுவெடிப்பில் மக்கள் அணிதிரட்டல் படைகள் என்று அழைக்கப்படும் ஈராக்கில் ஈரானிய ஆதரவு போராளிகளின் துணைத் தளபதி அபு மஹ்தி அல் முஹந்திஸ் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.

ஈரான் மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகவே அறியப்பட்டவர் சுலைமானி. அங்கு ஆட்சி அதிகாரம் அவரை தேடி வந்தபோதும் அதை ஏற்க சுலைமானி மறுத்துவிட்டார். ஆனால், அவருக்கு அந்த ஆட்சி அதிகாரத்தை தாண்டிய மக்கள் செல்வாக்கு உள்ளது.

எனினும், அமெரிக்கா தனது நேச நாடுகளிடம் இந்த தாக்குதல் குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்துவிட்டதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் அரசு நேரடியாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கனடாவில் அமலுக்கு வரும் புதிய சட்ட விதிமுறைகள் – நீங்கள் கவனிக்க வேண்டியவை

இது ஒருபுறமிருக்க, சுலைமானியை கொன்றதற்கு அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈராக் எச்சரித்துள்ளதால், பதற்றமான சூழலே அங்கு நிலவுகிறது.

இந்நிலையில், கனடா அரசு இராக்கில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மேற்கத்திய நலன்களுக்கு எதிரான தாக்குதல்களால் அச்சுறுத்தல் இருப்பதால், ஈராக்கில் வணிக ரீதியாக பணிபுரியும் கனடா மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.