‘பாதுகாப்பு கருதி 500 வீரர்கள் குவைத்துக்கு மாற்றம்’ – கனடா அரசு

Canada Tamil News
Canada Tamil News

Canada News in Tamil: பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு அமெரிக்கா பின்னர் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

உக்ரைன் விமானம் ஈரானில் விபத்து – 63 கனேடியர்கள் பலி

இதனால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவிக்க உச்சக்கட்ட பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மக்களுக்கு ஆற்றிய உரையில், “ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரான் தாக்குதலில், அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவே பாதிப்பு ஏற்பட்டது. ஈரானின் அத்துமீறல் செயல்களை சகிக்க முடியாது. சுலைமானி எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்க முடியாது. அந்நாட்டின் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என்றார்.

இச்சூழலில் ஈராக்கில் உள்ள கனடா ராணுவப் படையின் வீரர்கள் தற்காலிகமாக குவைத்துக்கு அனுப்பப்படுகின்றனர் என கனடாவின் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“நேட்டோ (NATO) அமைப்பின் திட்டப்படி எமது ராணுவ வீரர்களில் ஒரு பகுதியினர் தற்காலிகமாக குவைத் அனுப்பப்படுகிறார்கள். ராணுவ வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் கடமை.” என கனடா ராணுவத்தின் தலைவர் ஜெனரல் ஜானத்தன் வேன்ஸ் கூறியுள்ளார்.

யார் இந்த ஜக்மீத் சிங்? – கனடாவின் கிங் மேக்கராக உருவெடுத்தது எப்படி?