யார் இந்த ஜக்மீத் சிங்? – கனடாவின் கிங் மேக்கராக உருவெடுத்தது எப்படி?

jagmeet singh
jagmeet singh

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங், கனடாவின் பிரதமரை தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்தது எப்படி?? என்று இங்கே பார்க்கலாம்.

கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதிய ஜனநாயகக் கட்சி தலைவரான ஜக்மீத் சிங்கின் ஆதரவை நாடியிருந்தார்.

உணவில் உப்பு அதிகரித்தால் என்ன நடக்கும் தெரியுமா? – கனடா பல்கலை ரிப்போர்ட்

அந்தளவுக்கு கனடாவின் கிங் மேக்கராக உருவெடுத்த ஜக்மீத் சிங், 1979 ஆம் ஆண்டு கனடாவில் பிறந்தார். தாய், தந்தை இருவருமே இந்தியாவின் பஞ்சாப்யை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அவருடைய தாத்தா ஒரு இந்திய சுதந்திர போராட்ட தியாகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது கல்வி கட்டணம் உயர்த்தப்படுவதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் ஜக்மீத் சிங். இந்த போராட்ட குணமே ஜக்மீத் சிங்கை அரசியலை நோக்கி பயணப்பட வைத்தது.

2008ஆம் ஆண்டு புதிய ஜனநாயக கட்சியில் இணைந்து 2011ஆம் ஆண்டே ஒட்ராரியோ மாகாணத்தில் எம்பியாக தேர்வானார். அரசியலுக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் எம்பியான ஜக்மீத் சிங்கிற்கு அவருடைய அரசியல் ராஜ தந்திரங்களின் மூலம் 2018 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பு தேடி வந்தது.

இதன் மூலம் கனடாவின் பெரிய அரசியல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

விமானத்தில் இருந்து கழண்டு விழுந்த சக்கரம் – கனடாவில் உயிர்த் தப்பிய 49 பயணிகள் (வீடியோ)

தற்போது கூட, ஈரான் மேஜர் ஜென்ரல் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்ட விவகாரத்தால், ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே மக்களிடம் இந்த சூழல் குறித்து நேரடியாக பேச வேண்டும் என்றும், போர் ஏற்பட்டால் டிரம்ப்பை பின்பற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார் ஜக்மீத் சிங்.