உக்ரைன் விமானம் ஈரானில் விபத்து – 63 கனேடியர்கள் பலி

ஈரானின் தெஹ்ரான் நகரில் நடந்த விமான விபத்தில் கனடா குடிமக்கள் 63 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஜக்மீத் சிங்? – கனடாவின் கிங் மேக்கராக உருவெடுத்தது எப்படி?

போயிங் 737 ரக பயணிகள் விமானம் தெஹ்ரான் நகரில் உள்ள இமாம் கொமேய்னி விமான நிலையத்தில் இருந்து உக்ரைனின் கியூவ் விமான நிலையத்தினை நோக்கி புறப்பட்டு வானில் பறந்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 180 பேரும் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 80 பேர் ஈரானியர்கள். 63 பேர் கனடா நாட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 11 பேர் உக்ரைன் நாட்டவர்கள். 10 பேர் சுவிடன் நாட்டவர்கள் ஆவர்.

1985 ஏர் இந்தியா விமானம் விபத்தில் 268 குடிமக்கள் கொல்லப்பட்டது தான் கனடாவின் மிக மோசமான வான் போக்குவரத்து என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் உப்பு அதிகரித்தால் என்ன நடக்கும் தெரியுமா? – கனடா பல்கலை ரிப்போர்ட்

பலியானோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை கனடா அரசு சார்பாகவும், எனது மற்றும் எனது மனைவி சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.