19 மாத குழந்தை முகக்கவசம் அணியவில்லை என்பற்காக ஒட்டுமொத்த பயணிகளையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமானி!

Calgary
WestJet flight cancelled after dispute over whether toddler should wear mask Social Sharing

Calgary : பயணி ஒருவரின் 19 மாத குழந்தை முகக்கவசம் அணியவில்லை என்பதால், உண்டான பிரச்சனையால், விமானி விமானத்திலிருந்த ஒட்டுமொத்த பயணிகளையும் இறக்கி விட்ட சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது.

கால்கரி நகரில் இருந்து டொராண்டோ நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றில் Safwan Choudhry என்பவர் தன் மனைவி மற்றும் 19 மாதக் குழந்தையுடன் ஏறி அமர்ந்துள்ளார்.

விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரம் இருக்கும் நிலையில், விமான ஊழியர்கள் வந்து அவர்களது 19 மாதக் குழந்தை முகக்கவசம் அணியாமல் இருப்பதைக் கண்துள்ளனர்.

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும், இல்லையென்றால் விமானம் புறப்படாது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், கனேடிய சட்டப்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இருந்தாலும் ஊழியர்கள் சொன்னதற்காக சிறிய முகக்கவசத்தை  எடுத்து குழந்தைக்கு அணிவித்துள்ளனர்.

ஆனால், முகக்கவசம் அணிந்து பழக்கமில்லாத குழந்தை அழுது அடம்பிடித்ததோடு வாந்தி எடுத்துள்ளது. உடனே காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு குழந்தை அழுவதையும், அதன் பெற்றோரிடம் காவலர்கள் வாக்குவாதம் செய்வதையும் கண்ட சக பயணிகள் எதிர் குரல் எழுப்பியுள்ளனர்.

சிறிது நேரத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக விமான பயணிகள் அனைவரும் வெளியேற்றப்படுவதாக பைலட் அறிவித்துள்ளார். நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு  பெண், சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார்.

உடனே, வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கூறிய விமான பணியாளர் ஒருவர், காவலர்களை  அழைத்து அந்த பெண் வீடியோ எடுப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

சௌத்திரி குடும்பத்தினர் இன ரீதியாக தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறும் வீடியோ எடுத்த பெண், எத்தனையோ பேர் அவசர காரியமாக போய்க்கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை முகக்கவசம் அணியாததற்காக விமானத்தை யாராவது காலி செய்வார்களா என்கிறார்.

இதையும் படியுங்க: இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேரை மருத்துவமனைக்கு அனுப்பிய லம்போர்கினி கார் விபத்து!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.