Walter Reynolds: கனடாவில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம்!

Walter Reynolds
Walter Reynolds Murder

Walter Reynolds: கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள Red Deer பகுதி மருத்துவமனைக்குள் நுழைந்த  மர்ம நபர், அங்கிருந்த மருத்துவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட மருத்துவர் 45 வயதான Walter Reynolds என்பது தெரியவந்துள்ளது. அவரைக் கொலை செய்த நபர் 54 வயதான Deng Mabiour என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவர் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மருத்துவரும், கொலை செய்த நபரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பது தெரிய வருகிறது.

கொலைக்கான காரணம் கண்டுபிடித்துவிட்டாலும், வழக்கு நீதிமன்றம் செல்லும் வரையில் எந்த தகவலும் வெளியிடப்படாது என்றும் காவல் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Montreal : கனடாவில் 12 வயது தமிழ் சிறுமி தீயில் கருகி பலி – அதிர்ச்சியில் தாயுக்கும் நேரிட்ட துயரம்!

கைது செய்யப்பட்ட கொலையாளி காவலில் அடைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, குற்றவாளி Deng Mabiour, நடந்தது எதுவும் தனக்கு நினைவில்லை என்றும், தான் ஒரு மருத்துவரை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

மன நலம் பாதிக்கப்பட்டவர் போல நீதிபதி முன்பாகவே ஹா ஹா ஹாவென  சிரித்துள்ளார்.

தனக்கு எதுவும் நினைவில்லை என்றும், தனக்கு உடல் நலம் சரியானதும் எல்லாம் நினைவுக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

குற்றவாளி இப்படி வழக்கை குழப்பி வருவதால், வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு விசாரணையை  தள்ளி வைத்த நீதிபதி, வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்வதற்கான உதவியை நாடுமாறு, குற்றவாளிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms