CRA: கனடாவின் அரசு கணக்கில் மாபெரும் தகவல் திருட்டு! 9,000 பயனர் கணக்கு விவரங்கள் பறிபோன சோகம்!

CRA
Usernames Passwords over 9000 canada government accounts stolen

கனடாவில் அரசு சேவைகளில் (CRA) பதிவு செய்யப்பட்டிருந்த 9000 பயனர்களின் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, இன்றைய சூழ்நிலையில், அனைத்து வகையான சேவைகளும் இணைய வழிப் பயன்பாட்டிற்கு மாற்றப் பட்டுள்ளன.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில், பொதுமக்கள் சேவை தொடர்பான விவரங்கள் மற்றும் முக்கிய கோப்புகளை அவ்வப் போது ஹேக்கர்கள் இணைய வழியில் திருடி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த சில மாதங்களாக உலக நாடுகளில் அச்சுறுத்திய நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா, ஈரான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அந்த வரிசையில் தற்போது கனடாவும் இணைந்துள்ளது. கனடாவின் அரசு சேவைகளுக்கான தளத்தில் இருந்து சுமார் 9000 பயனர்களின் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Alexandra Najjar: பெய்ரூட் வெடி விபத்தில் கொல்லப்பட்ட கனேடிய சிறுமி – வெளியான உருக்கமான தகவல்!

இந்த தாக்குதல்கள் கனடா மத்திய அரசின் 30 துறைகள் மற்றும் CRA (கனடா வருவாய் முகமை) கணக்குகளால் பயன்படுத்தப்படும் G.C.K சேவையை குறி வைத்துள்ளன என்று கனடா செயலகத்தின் கருவூல வாரியம் விளக்கமளித்தது.

கிட்டத்தட்ட 9,041 G.C.K கணக்கு வைத்திருப்பவர்களின் கடவுச் சொற்கள் மற்றும் பயனர்களின் பெயர்கள் மோசடியாக திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பயனாளர்களின், அனைத்து கணக்குகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இது தவிர சுமார் 5,500 கனடா வருவாய் முகமை கணக்குகளும் இதில் குறிவைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து, வரி செலுத்துவோர் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, தங்களுடைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

இந்த ஹாக்கிங் முயற்சியில், தனியுரிமை மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆராயவும், இந்த கணக்குகளிலிருந்து தகவல் பெறப்பட்டதா என்பதையும் தீர்மானிக்க அரசாங்கமும் காவல்துறையும் விசாரணை தொடங்கியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms