Alexandra Najjar: பெய்ரூட் வெடி விபத்தில் கொல்லப்பட்ட கனேடிய சிறுமி – வெளியான உருக்கமான தகவல்!

alexandra najjar beirut explosion
alexandra najjar beirut explosion

Alexandra Najjar : லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் கனேடிய சிறுமி ஒருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டன் கணக்கிலான அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் வெடித்து சிதறியதில், அந்நகரமே உருக்குலைந்து போனது.

இந்த கொடூர விபத்தில் இதுவரையில் 220 பேர் பலியாகி இருப்பதுடன், சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்த கோர வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் கனேடிய குடிமகளான 3 வயது சிறுமி அலெக்ஸாண்ட்ரா நாகியர்.

வெடிப்பு சம்பவம் நடந்த துறைமுகத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ட்ரேசி அவத் நாகியர் மற்றும் பால் நாகியர் தம்பதியின் குடியிருப்பு.

அவ்வளவு தூரத்தில் இருந்த போதிலும், வெடி விபத்தின் தாக்கம் இவர்களின் வீட்டையும் பலமாக தாக்கியுள்ளது. இதில் சிறுமி அலெக்ஸாண்ட்ரா தூக்கி வீசப்பட்டார்.

தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Scarborough: அரிதிலும் அரிதான சம்பவம்! கனடாவில் பறந்து வந்த டிரக் சக்கரம் மோதி வாகன ஒட்டி பலியான துயரம்!

எப்படியாவது தங்கள் மகள் பிழைத்துக் கொள்வாள் என்று ஏங்கிய  பால் நாகியர் தம்பதி, தங்களது மகளின் மரணம் லெபனான் அரசியல், நிர்வாகத்தில் ஒரு மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமி அலெக்ஸாண்ட்ராவின் மரணம் லெபனான் அரசின் ஊழல் மற்றும் சர்வதேச சமூகத்தின் கண்துடைப்பு நடவடிக்கைகளைப் பற்றி பேச தூண்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் பார்வையை லெபனான் மீது திருப்ப வேண்டும் என தாங்கள் விரும்புவதாக சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

லெபனான் நாட்டில் ஊழல் பெருக முக்கிய காரணம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளே அத்தம்பதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் நாங்கள் எதிர்கொண்டு வரும் பல சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று வேதனையுடன் பேசியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms