Scarborough: அரிதிலும் அரிதான சம்பவம்! கனடாவில் பறந்து வந்த டிரக் சக்கரம் மோதி வாகன ஒட்டி பலியான துயரம்!

Scarborough
Scarborough Accident Flying Tyre

Scarborough: கனடாவில், ஒன்ராறியோ மாகாணத்தில் ஸ்கார்பாரோ பகுதியில் நேற்று  (புதன்கிழமை) காலை நெடுஞ்சாலை 401இல், ஒருவர் சொகுசு வாகனம் ஓட்டி வந்துள்ளார்.

அவருடைய காரின் விண்ட்ஷீல்ட் மீது, பறந்து வந்த டிரக் வாகன சக்கரம் மோதியதில், அவர் உயிரிழந்துவிட்டதாக  ஒன்ராறியோ மாகாண காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுனர், நெடுஞ்சாலை 401இன் எக்ஸ்பிரஸ் பாதையில், மார்க்கம் மற்றும் மெக்கோவன் சாலைகளுக்கு இடையில் பயணித்துள்ளார்.

அப்போது காலை 8 மணிக்கு முன்னதாக கிழக்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில், பறந்து வந்த வாகன சக்கரம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

Santhoskumar Selvarajah : கனடாவில் இளம்பெண்ணிடம் தமிழ் இளைஞன் செய்த இழிவான செயல் – கையும் களவுமாக பிடித்த காவல்துறை!

இது குறித்து ஒன்ராறியோ மாகாண காவல் துறையினர் கூறுகையில், நெடுஞ்சாலை 401 இல் ஒரு டிரெய்லர் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த ​​டிரெய்லரிலிருந்து ஒரு டயர் கழன்று கிழக்கு நோக்கி செல்லும் பாதையில் பறந்து, 24 வயது இளைஞரின் எஸ்.யூ.வி காரை தாக்கியது. இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் பிக்கப் ரக டிரக் மற்றும் டிரெய்லரைக் கண்டுபிடித்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து வார்டன் அவென்யூவின் கிழக்கிலிருந்து மார்னிங்ஸைட் அவென்யூ வரையிலான போக்குவரத்து தடைபட்டது. குறிப்பாக நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய எக்ஸ்பிரஸ் பாதைகளை காவல் துறையினர் மூடினர்.

பின்னர் கிழக்கு நோக்கி எக்ஸ்பிரஸ் பாதைகள் நண்பகலுக்கு பிறகு திறக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றாலும், பறக்கும் சக்கரங்கள் எவ்வளவு வேகமாக செல்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு ஓட்டுநர்கள் எதிர்வினையாற்றுவதற்கு நேரம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms