ஆசிரியர்களின் செயலால் அதிர்ச்சி! கனடாவில் பள்ளிகளையும் விட்டு வைக்காத கொரோனா தொற்று!

covid-19
Teachers Test Covid-19 Positive

டப்ரின் பீல் கத்தோலிக்க மாவட்ட பாடசாலையில் நடத்தப்பட்ட சோதனையில் இரு ஆசிரியர்களுக்கு covid-19 தொற்று நேர்மறையாக பதிவாகியுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்காவது இங்கிலாந்தில் உண்டாகிய உருமாறிய வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றனர்.

அந்த இரு ஆசிரியர்கள் சுகாதார கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பாடசாலையில் நடந்து கொண்டதே தொற்று பரவலுக்கான காரணம் என்று கூறுகின்றனர்.

இரு ஆசிரியர்களும் பணிபுரிந்த பாடசாலையில் மூடப்பட்டிருந்த நிலையிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு தினசரி பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு என சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் போடப்பட்டு தான் அங்கு பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பாடசாலையில் ஒரு சில இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பாடசாலையில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் மற்றும் எடை மற்றும் பளு தூக்கும் அறைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த இரு ஆசிரியர்களும் தடையை மீறி உடற்பயிற்சி கூடத்திற்கு சேர்ந்தே சென்றிருக்கின்றனர்.

மேலும் அடிப்படை பாதுகாப்பு முறையான முக கவசத்தையும் அணியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த இரு ஆசிரியர்களும் கவனக்குறைவாக அலட்சியத்தோடு செய்த காரியத்தினால் தொற்றானது மிக எளிதாக அவர்களைப் பற்றிக் கொண்டது.

இந்த காரணத்தால் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று கூறி அந்த பகுதியில் பாடசாலைகள் திறப்பதற்கு அடுத்த வாரம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: கடுமையாக்கப்பட்ட விதி! விமானத்தின் மூலம் கனடா வரும் பயணிகளுக்கு இனி இது கட்டாயம்!