கடுமையாக்கப்பட்ட விதி! விமானத்தின் மூலம் கனடா வரும் பயணிகளுக்கு இனி இது கட்டாயம்!

China
china flights

கனடா அரசாங்கம் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளில் அவசரகால நிலை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அமலில் உள்ளது.

இந்நிலையில் அண்டை நாடு மற்றும் அயல் நாடுகளிலிருந்து கனடாவிற்கு படையெடுத்து வரும் பயணிகளுக்கு கனடாவின் விமானத்துறை சில கட்டுப்பாடுகளையும் விதிமுறை மற்றும் தடைகளையும் அறிவித்துள்ளது.

கனடாவின் அண்டை நாடான அமெரிக்காவிலிருந்து நிலை எல்லையின் வாயிலாக கனடா நோக்கி வருபவர்கள் எதிர்மறையான தொற்றின் சோதனை முடிவை கொண்டே இருக்க வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து நில எல்லை வாயிலாக கனடா வருபவர்களுக்கு தொற்றுக்கான சோதனை கட்டாயமானது என்றும் அறிவித்துள்ளார்.

இந்த மாதம் 15ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

தொற்றின் சமீபத்திய கட்டுப்பாடுகளாக விமானத்தின் மூலம் வரும் பயணிகள் எதிர்மறையான PCR சோதனையே கொண்டிருக்க வேண்டும் என்றும் ஏர் கனடா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏர் கனடா விமான நிறுவனம் மேலும் ஆயிரத்து இருநூறு பேர்களை பணி நீக்கம் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக இந்த சேவை குறைப்பு நடத்தப்பட்டது என்று ஏர் கனடா விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் இறுதி வரை டொரன்டோ, ஏன்ட்ரியோ ,வன்கூவர் பகுதிகளிலிருந்து புறப்படும் 17 விமானங்களின் விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

இன்றைய வைரஸ் தொற்றின் பதிவுகள் :

ஒன்டாரியோ பகுதியில் 1022 புதிய தொற்றுகளும், கியூபெக்கில் 826 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 435 பேருக்கும், அல்பேட்டா பகுதியில் 195 பேருக்கும், மனிடூபாவில் 75 பேருக்கும் புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.

இதையும் படியுங்க: இனி கனடாவிற்கு எந்த தடைகளும் இல்லை – ஹெல்த் கனடா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!