கனடிய அரசாங்கத்தில் இந்திய வம்சாவளி நபர்கள் – அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர்களாக பிரதமர் நியமித்துள்ளார்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசாங்கத்தில் 3 இந்தோ-கனடியர்களை பாராளுமன்ற செயலாளர்களாக நியமித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ட்ரூடோ ஒரு அறிவிப்பில் தனது புதிய அரசாங்கத்திற்கு பாராளுமன்ற செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளை நியமித்தார்.

வெளியுறவு துறை அமைச்சர் மெலனி ஜோலியின் நாடாளுமன்ற செயலாளராக மணித்தர் சித்து நியமிக்கப்பட்டார். பிராம்டன் கிழக்கின் தொகுதியிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்முறையாக ஹவுஸ் ஆப் காமன்சுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மனித்தர் சித்தூ சர்வதேச அபிவிருத்தி அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் பதவி வகித்தார் .

இந்தியாவின் குஜராத்தில் பிறந்த ஆரிப் விராணி டொரண்டோவில் உள்ள Parkdale- highpark பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டு துறை அமைச்சர் மேரி என்ஜி-ன் பாராளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விராணி முந்தைய அரசாங்கத்தில் வழக்கறிஞர் அதிபராகவும் சமீபத்தில் நீதி அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ரூபி சகோடா பிராம்டன் வடக்கை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். இவர் ஹவுஸ் ஆப் காமன்ஸ் குழுவின் முன்னாள் தலைவர் ஆவார். மூன்று பாராளுமன்ற செயலாளர்களும் கிரேட்டர் டொரன்டோ பகுதியை சேர்ந்தவர்கள் என்பது வியக்கத் தக்கதாகும்.

கனடாவின் தேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த், சர்வதேச வளர்ச்சி மற்றும் பசுபிக் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ஹர்ஷித் சர்ஜன் மற்றும் மூத்த அமைச்சர் கமல் கேரா ஆகிய மூன்று இந்திய கனடியர்களை தனது சிறுபான்மை அரசாங்கத்தில் பிரதமர் ட்ரூடோ அமைச்சர்களாக நியமித்துள்ளார்.