பிரதமரின் குடியிருப்புப் பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் யார்.? பின்னணியை கண்டு அதிர்ந்த காவலர்கள்!

cp 24

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நல் வாய்ப்பாக இந்த சம்பவம் நடந்தபோது ஜஸ்டின் ட்ரூடோ அங்கு இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இனவெறிக்கு எதிரான பேரணியில் முழங்காலிட்டு ஆதரவை தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் : நெகிழ்ச்சியில் கனேடிய மக்கள்

ஓட்டாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ள ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை பிக்கப் ரக வாகனம் கொண்டு மோதி சேதப்படுத்தி ஒரு நபர் உள்ளே நுழைந்தார்.

வளாகத்துக்குள் நுழைந்து பிரதமர் ட்ரூடோ குடியிருப்பு நோக்கி சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அந்த நபர் ஆயுதப்படையை சேர்ந்தவர் என்பது  தெரியவந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தனது வேலையை இழந்ததற்காக, விரக்தியை வெளிப்படுத்த இவ்வாறு செய்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms