ஒன்டாரியோ மிசிசாகா பகுதியில் டாக்ஸி ஓட்டுனருக்கு அரங்கேறிய கொடூரம்!

Police are
Police are investigating a robbery and stabbing in Mississauga that sent one man to hospital.

டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் மிசிசாகா பகுதியில் திருட்டு செயலின் போது கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வானது ஒன்டாரியோ ஸ்ட்ரீட் மற்றும் தண்டா ஸ்றீட் வெஸ்ட் பகுதியில் வியாழக்கிழமை அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிப்படைந்த ஓட்டுநர் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நகரிலுள்ள டிராமா மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் காவல் துறையினர் அப்பகுதியில் அச்சுறுத்தும் சூழல் நிகழ்ந்து கொண்டிருப்பதால் சந்தேகத்திற்குரிய இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை அன்று காலைப் பொழுதில் அந்த அச்சுறுத்தக்கூடிய இரண்டு நபர்களையும் காவல்துறையினர் விடுதலை செய்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குற்றம் ஏற்பட்ட இடத்தில் சந்தேகத்திற்குரிய இருவரை கைது செய்து அதன் பின்பு எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டது சற்று மங்கலாக சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

மேலும் காவல்துறையினரின் புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் காவல்துறையினர்.

டாக்சி ஓட்டுனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வெகுவிரைவில் நலம் அடைந்து விடுவார் என்றும் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

நலம் அடைந்த பின்பு எடுக்கப்படும் விசாரணையானது மேலும் சில தகவல்களை வெளிக்கொண்டு வர உதவும் என்று காவல்துறையினரால் நம்பப்படுகிறது.

இதையும் படியுங்க: ஹமில்டன் பகுதியில் புதியதாக பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்பு!