ஹமில்டன் பகுதியில் புதியதாக பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்பு!

Hamilton police
Hamilton police say they found the body of a buried baby at a home in the Beasley neighbourhood. (Bobby Hristova/CBC)

கனடாவின் ஹமில்டன் பகுதியில் புதியதாக பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்பு எடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மதிய நேரம் ஹாமில்டன் பகுதியிலுள்ள வீட்டின் அடித்தளத்திலிருந்து குழந்தை இறந்த நிலையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் வெல்லிங்டன் பகுதிக்கு அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு புதன்கிழமை நடு இரவில் இருந்தே அந்தப் பகுதியில் அசாதாரண சூழல் மற்றும் சந்தேகத்திற்குரிய சூழல் உள்ளதாக தெரிந்து கொள்ளப்பட்டது.

இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புதியதாக பிறந்த சிசு ஒன்றினை சடலமாக மீட்டனர்.

விசாரணைக்கு முன்பு குழந்தை எரிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அறிவித்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டிற்குள் இருந்த இருவரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க: கனடாவில் கால் பதிப்பவர்கள் இந்த விதியை மீறினால் 880 டாலர்கள் அபராதமாக செலுத்த நேரிடும்!

மேலும் சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீட்டின் நபர் சம்பவம் நடந்ததற்கான விவரங்களை தெளிவாக கூறவில்லை என்றும் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை பெற்றோர் கூட இவ்வாறு செய்திருக்க இயலும் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாழ்வு மனப்பான்மை , இனவெறி போன்றவற்றை பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்நிலையில், பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த இந்த சம்பவம் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மற்றும் ஆணிவேராக மனிதாபிமானத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அறியமுடிகிறது.

எந்த பாவச் செயலையும் அறியாத பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயரத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.