கனடாவில் 763 வைரங்கள் பதித்த தங்கப்பறவை திடீர் மாயம்! மலைக்க வைக்கும் அதன் மதிப்பு?

Ron Shore golden egle
Ron Shore personally commissioned the eagle statue, dubbed the 'Maltese Eagle' or 'Golden Eagle,' and said he had to mortgage his house to buy the gold and diamonds.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 763 வைரங்கள் பதித்த தங்கப் பறவை சிலை  ஒன்று கொள்ளையடிக்கப்பட்டது.

Ron Shore என்ற நபர் அந்த தங்கப் பறவையை தன்னுடைய காரில் ஏற்றும்போது, மர்ம நபர்கள் இருவர் அவருடைய தலையில் தாக்கிவிட்டு, அந்த பறவையை பிடுங்கிச் சென்றுவிட்டதாக புகாரளித்திருந்தார்.

பல இலட்சம் டாலர் மதிப்புடைய அந்த தங்கப்பறவை, Lloyd’s என்ற காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து Ron Shore காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு கோரியிருந்தார். நீதிமன்றமும் இழப்பீடு வழங்கவேண்டும் என Lloyd’s நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த நிறுவனம் இழப்பீடு தொகையை  வழங்க மறுத்ததுடன், அந்த தங்கப்பறவைக்கு பாதுகாப்பாக எப்போதும் அதனுடன் இரண்டு பாதுகாவலர்கள் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை சுட்டிக் காட்டியது.

அதனை மேற்கோள் காட்டி காப்பீட்டு நிறுவனத்தின் கொள்கைகளை Ron மீறிவிட்டதாக நீதிமன்றத்தில்  வாதிட்டது.

சுமார் எட்டு கிலோ எடையுள்ள, 763 வைரங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்கப் பறவையின் மதிப்பு 930,000 டாலர்கள் வரும் என மதிப்பீடு செய்யப் பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க மறுப்பதற்கு உறுதியான ஆதாரம் உள்ளது என்பதை தெளிவாக விளக்கி கூறியது.

மேலும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கிடையில், திருடப்பட்ட அந்த தங்கப்பறவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விலைமதிப்பு மிக்க பொருளை இழந்த வருத்தத்தில் தவிக்கிறார் Ron Shore.

இதையும் படியுங்க: கனடாவில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் பாக்டீரியா தொற்று – அரசின் முக்கிய அறிவிப்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.