கொரோனா தடுப்பூசியை பகிரங்கமாகப் பெறுவதாக பிரதமர் ஜஸ்டின் உறுதியளிப்பு!

கொரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார்.

எனக்கான நேரம் வரும் போது, அதை பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் உற்சாகமாக போட்டுக்கொள்வேன் என பிரதமர் கூறினார்.

உலகில் பல நாடுகளில் அவசர மருத்து பயன்பாட்டுக்கு கரோனா தடுப்பூசியைப் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.

கனடாவில், பைஸ்ஸர்- பயோ என்டெக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக  முன்கள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பராக் ஒபாமா மற்றும் சர் இயன் மெக்கல்லன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களைப் போலவே, தானும் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக தடுப்பூசி போடுவதாக உறுதியளித்தார்.

இந்த தொற்றுநோய் பரவியதில் இருந்து  நம் விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் நம்புகிறோம்.

இந்த நோய் மட்டுமல்லாது ஏற்கனவே நம்மை அம்மை நோயிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும், பல கொடிய நோயில் இருந்து நம்மைப் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் எங்கள் விஞ்ஞானிகளை நாங்கள் நம்புகிறோம் என்றும் பிரதமர் ட்ரூடோ விளக்கினார்.

தடுப்பூசி போடுவதைப் பற்றி கவலைப்படவில்லை என பிரதமர் தெளிவுப்படுத்தியிருந்தாலும், கனடாவில் முன்னுரிமை பட்டியலில் அவர் உயர்ந்தவராக இருக்க மாட்டார் என ஒப்புக் கொண்டார்.

40 வயதுக்கு மேற்பட்ட நல்ல ஆரோக்கியமான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முறை வரும்போது நிச்சயமாக நான் உற்சாகமாக மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபிக்கு கரோனா உறுதியானது. பின்னர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: வீட்டிலிருந்து வேலை செய்யும் கனேடியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசின் முக்கிய அறிவிப்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.