மழையால் கனடாவில் விமான சேவை பாதிப்பு – ஹெல்ப்லைன் நம்பர் இதோ

கனடாவின் முக்கிய நகரங்களில் முன்னறிவிக்கப்பட்ட மழை எச்சரிக்கையால், உள்ளூர் விமான சேவை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக, இன்று(ஜன.12) தலைநகர் ஒட்டாவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கான விமான சேவை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஒருவேளை விமான சேவை ரத்தானாலோ, தாமதமானாலோ உங்கள் மொபைல் எண்ணுக்கு அல்லது மெயில் ஐடிக்கு மெசேஜ் வந்துவிடும்.

அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி – கனடா திரும்பிய இளவரசி மேகன்

இந்நிலையில், சேவை பாதிப்பாக வாய்ப்பிருக்கும் விமானத்தில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம், இட அனுமதி இல்லாமல் முன்பதிவில் மாற்றங்களைச் செய்வதை எளிதாக்கும் வகையில் ஏர் கனடா தனது டிக்கெட் கொள்கையை திருத்தியுள்ளது.

உங்கள் டிக்கெட்டை Air Canada Vacationsல் மூலம் வாங்கியிருந்தால், தயவுசெய்து 1-800-296-3408 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் விமான பயண நிலையை சரிபார்க்க, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு ஏர் கனடாவின் தானியங்கி விமான தகவல் அமைப்பின் 1-888-422-7533 என்ற எண்ணில் அழைக்கலாம்.

பொங்கல் பயணம் – ஏர் கனடாவில் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?