அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி – கனடா திரும்பிய இளவரசி மேகன்

Image Source - CNN.com
Image Source - CNN.com

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் அறிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘இது பல மாத விவாதங்களுக்கு பிறகு எடுத்த முடிவு. அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகவும், பொருளாதார சுதந்திரத்தை பெறும் வகையில் முழு நேர பணிக்கு செல்லவும் இருவரும் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பயணம் – ஏர் கனடாவில் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

தங்களுடைய நேரத்தை வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு இடைப்பட்ட ஒரு இடத்தில் செலவிட திட்டமிட்டுள்ளதாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் யாரையும் அவர்கள் கலந்தோசிக்கவில்லை என கூறப்படுகிறது. இருவரின் இந்த முடிவு, பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் சஸ்செக்ஸ் ராயல் சாரிட்டி என்ற தொண்டு அமைப்பை சொந்தமாக தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே ஹாரி-மேகல் தம்பதியினர் தொடங்கிவிட்டனர்.

அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் நிலையிலிருந்து விலகியதும், லண்டன் அரச குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இறையாண்மை மானியத்தை இனி பெறப்போவது இல்லை என ஹாரியும், மேகனும் அறிவித்துள்ளனர். இந்த முடிவு, அரச குடும்பத்தின் பொருளாதார சுதந்திரம் கொண்ட உறுப்பினர்களாக தங்களை மாற்றும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், தாங்கள் எந்த வடிவத்திலும் சம்பாதிப்பதற்கு தடை உள்ளதாகவும், தங்களுடைய புதிய பணிகள், முழு நேர வேலைக்கு செல்லும் அரச குடும்ப உறிப்பினர்களாக தங்களை மாற்றும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அரச குடும்ப பொறுப்பில் இருந்து ஹாரி விலகிய பிறகு, இளவரசி மேகன் கனடா திரும்பியுள்ளார். இதனை மேகனின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்த, கனடா ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

மேகனுக்கும் கனடாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அமெரிக்க நடிகையான மேகன், அமெரிக்காவின் பிரபல டிராமா நிகழ்ச்சியான Suits ஷூட்டிங்கிற்கான கனடாவில் தான் தன்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.