கனடாவில் ஹாமில்டன் பகுதியில் பூனை மலத்தை திருடிய மர்ம நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Laurie Pringle
Laurie Pringle

கனடா ஹாமில்டன் நகரில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை திருடிய நபருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஒரு பெண்.

வீடுகளுக்கு முன் டெலிவரி செய்யப்பட்ட பொருட்களை, தொடர்ந்து முன்று ஆண்டுகளாக மர்ம நபர் ஒருவர்  திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக  நடந்து வந்த நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் 54 வயதான Laurie Pringle என்ற பெண்ணும் அவரது அண்டை வீட்டாரும் பொருட்களை திருட்டுக் கொடுத்தே சலித்துப் போனார்கள்.

ஒரு கட்டத்தில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர்கள் ஒரு திட்டம் தீட்டினர்.  அதன்படி, பூனையின் கழிவுகளை சேகரித்து ஒரு பெட்டியில் போட்டு, அதனை சீல் செய்து,  அமேசான் லோகோவை ஒட்டினர்.

அந்த பெட்டியை வீட்டு வாசலில் வைத்துவிட்டு காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே, 40 நிமிடங்களுக்குப் அங்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

வழக்கம்போல மெதுவாக அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த காட்சி, அப்பெண்ணின் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டுள்ள காமெராவில் பதிவாகியுள்ளது.

ஆனால், Laurie இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகாரளிக்கவில்லை. பொலிசார் மீது தான் நம்பிக்கையிழந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர்,

எத்தனை பேர் இதுபோன்ற சம்பவங்களால் சலிப்படைந்துள்ளார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது என்கிறார்.

மற்றவர்கள் அதேபோல் செய்யவேண்டாம் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளர்கள். ஆனால், பல முறை பொருட்களை இழந்த Laurie அந்த அறிவுரைக்கு செவிமடுக்க தயாராக இல்லை.

இதையும் படியுங்க: வீட்டிலிருந்து வேலை செய்யும் கனேடியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசின் முக்கிய அறிவிப்பு!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.