பிப்ரவரி 22 ஆம் தேதி வரை டொராண்டோ மக்கள் பின்பற்றியே ஆக வேண்டிய உத்தரவு – அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்!

Ontario ford and christine eliot
Ontario ford and christine eliot

ஒன்டாரியோ மாகாணத்தில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நீட்டிக்க ஒன்டாரியோ அரசாங்கம் ஒன்டாரியோவில் முதல்வர் டாக் போர்ட் இன்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒன்டாரியோவில் அமலில் உள்ள அவசரகால நிலை ஊரடங்கு வருகின்ற செவ்வாய் அன்று நள்ளிரவு காலாவதியாக உள்ளது.

இந்நிலையில் கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் இந்த அவசரகால ஊரடங்கு நிலையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு முன்பு சில பாதுகாப்பு முறைகளையும் கட்டுப்பாடுகளையும் போர்ட் அவர்கள் பின்பற்றி நடக்குமாறு அறிவித்துள்ளார்.

மேலும் கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் அமலில் உள்ள கோவிட்  கட்டுப்பாடுகள் இந்த வாரம் முதல் பிராந்திய அடிப்படையில் பகுதி பகுதியாக தளர்த்தப்பட்டு வரும் என்பதையும் தெரிவித்துள்ளார்

வருகின்ற புதன்கிழமை முதல் கிழக்கு ஒன்டாரியோவில் மூன்று பிராந்தியங்களின் தொகுதிக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பொதுமுடக்க உத்தரவு ரத்து செய்யப்பட உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏனைய 28 பிராந்தியங்களின் கீழுள்ள பகுதிகளுக்கு வருகின்ற 18 ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டொரன்டோ யோக்வில் ஆகிய மூன்று பகுதிகளில் பிராந்தியங்களின் அடிப்படையில் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கனடாவிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு தளர்வுகள் சிறிதுசிறிதாக வெவ்வேறு தேதிகளில் பிராந்தியங்களின் அடிப்படையில் ரத்து செய்யப்படும் என்பதை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கோவிட்  கட்டுப்பாடுகள் பிராந்தியங்களின் அடிப்படையில் அதன் கீழ் உள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு தளர்த்தப் படுவது ஒரு சீரான இயல்பு நிலையை வெகுவிரைவில் அடைந்து விடலாம் என்பதே இதன் நோக்கமாகும்.

கனடா முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்ப இந்த வழிமுறை மிகவும் சிறப்பானதாகும் என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க: இதனை மீறினால் அபராதம்! அடுத்து தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் கனேடிய மக்கள்!