கனடாவில் தமிழர் மீது குறி வைத்து துப்பாக்கிச்சூடு! காவல் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Pickering
Male shot in his driveway on Woodview Drive in Pickering

நேற்று (திங்கள்கிழமை) மாலை கனடாவில் பிக்கரிங் பகுதியில் நடந்த  (Pickering)  ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த ஆண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் வூட் வியூ (Woodview Drive) பகுதியில், Twyn Rivers Drive மற்றும் Alton Road பகுதியில், நேற்று மாலை 5 மணியளவில் நடந்தது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த ஆண், வெள்ளை நிற காரில் வந்த ஒரு நபரால் சுடப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், தாக்குதலுக்கு ஆளானவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலை சீராக மேம்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இதுவரை இத்தாக்குதல் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், தற்போது சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் கிடைத்த தகவல் படி, டொரோண்டோ தமிழர்கள் மத்தியில் T Dot Auto Collision உட்பட பல தொழில் நிறுவனங்களை நடத்திவரும் 37 வயதான மனோ சுப்ரமணியம் என்ற தமிழர் மீதே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது.

இவர் தனது இல்லத்தின் முன் வைத்து குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டதாக Durham பிராந்திய காவல் துறையின் ஆரம்ப விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் பூர்விக குடிமக்களின் தலைவரை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி – வெளியான அதிர்ச்சி வீடியோ!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms