கனடாவில் பூர்விக குடிமக்களின் தலைவரை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி – வெளியான அதிர்ச்சி வீடியோ!

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் தணியாமல் இருக்கும் நிலையில், கனடாவில் அது போல ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அல்பர்ட்டாவில் ‘சிபெவ்யான்’ என்ற பூர்விக குடிமக்களின் தலைவரான ஆலன் ஆதம், ஒரு காஸினோவுக்கு அருகே தனது காரை நிறுத்தியபோது காவல்துறையினரால்  சிறைபிடிக்கப்பட்டார்.

அப்போது அவர்கள் ஆதமை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms