கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் என்ற பெண் முதுகலை படித்துவந்தார். ரேச்சல் டொரோண்டொவில் பல்கலைக்கழக வளாகம் அருகே லெய்ட்ச் அவின்யூ அசினிபோயினே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, புதன்கிழமை காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் அவரைத் தாக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் மாணவியின் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் தரவரிசை பட்டியல் – கனடாவுக்கு என்ன இடம் தெரியுமா?

இது குறித்த தகவல் அறிந்த ரேச்சலின் குடும்பத்தினர், தனது மகளைப் பார்க்க கனடா செல்வதற்கு விசா நடைமுறைகளை விரைவாக்க உதவி செய்ய வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உதவியைக் நாடியுள்ளனர்.

மேலும், மாணவி ரேச்சலின் உடல்நிலை ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு சீராக இருப்பதாவும் இருப்பினும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

கனடா போலீசார் பொதுமக்களுடன் உதவியுடன் மாணவி ரேச்சலை தாக்கிய அந்த மர்ம நபரைப் பற்றி விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த நபரின் வயது 20களின் மத்தியில் இருக்கும் என்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மாணவி தாக்கப்பட்டது குறித்து டொரோண்டோ போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடிவருகின்றனர்.

ரேச்சலின் சகோதரி ரெபேக்காவின் டி.என்.எம் உடன் பேசுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்க விசாவைப் பெறுவது எனது குடும்பத்தினருக்கு காலத்தின் தேவை. விசா செயல்முறை சிக்கலானது. நாங்கள் இன்னும் அதைக் கண்டுபிடித்து வருகிறோம். நாங்கள் வெளிவிவகார அமைச்சரின் உதவியை நாடுகிறோம். ”

ரேச்சலின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் கூறுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்கச் செல்ல விரைவாக விசாவைப் பெறுவது என்பது சிக்கலானது. நாங்கள் அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் உதவியை நாடியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ரேச்சல், மூளைக்கு இரத்த விநியோகத்தை துண்டிக்கும் வகையில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. ரேச்சலின் கழுத்துப் பகுதியில் பல முறை குத்தப்பட்டதாகத் தெரிகிறது, தவிர இருபுறமும் கீறல்கள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளனர்.

‘சாதனைக்கு ஊனம் தடையில்லை’: கனடாவில் சாதித்த ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி கோல்ப் வீரர்

ரேச்சல் தற்போது கனடாவில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்டில் பல்கலைக்கழக உதவித்தொகை உதவியுடன் படித்து வருகிறார். ரெச்சல் இந்த ஆண்டு மே மாதம் பட்டம் பெற உள்ளார். மேலும், தனது செலவுகளுக்காக அங்கே அவர் பகுதிநேரமாக வேலை செய்து வந்தார்” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரேச்சலின் உறவினர் ஒருவர் கூறுகையில், அவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள். இந்த செய்தி உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. ரேச்சலின் பெற்றோர் குன்னூரில் இருப்பதாகவும் அவர்களுடைய மொபைல் எண்ணையும் குறிப்பிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கனடாவின் டொரோண்டோவில் இந்திய மாணவி ரேச்சல் ஆல்பர்ட் மீதான மோசமான தாக்குதலை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். அவருடைய குடும்பத்தினருக்கு எளிதில் விசா கிடைக்க நான் வெளிவிவகார அலுவலர்களிடம் கேட்டுள்ளேன். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பொன் எண்களைக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.