பாதிக்கப்படும் இந்திய மற்றும் சிரிய ஊழியர்கள் – தடுப்பூசி ஆதாரத்தை வாய்ப்பாக பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்கள்

qr code restaurant

நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் தடுப்பூசி சான்றிதழ் அத்தியாவசியமற்ற இடங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. covid-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி சான்றிதழ் சிறந்த நடவடிக்கையாக இருப்பினும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கனடா முழுவதும் உணவக ஊழியர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது. உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்க ஊழியர்கள் கேட்கும்போது சில வாடிக்கையாளர்கள் கோபத்தை வெளி காட்டுகின்றனர்.

தடுப்பூசி சான்றிதழ் விதிகளை ஏற்க மறுக்கும் சில வாடிக்கையாளர்களின் கோபத்தினால் வாக்குவாதம், இனவெறி, தகாத வார்த்தைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை உணவக ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக கூறுகின்றனர்.

கனடா முழுவதும் உள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் சிலர் covid-19 தடுப்பூசி மருந்துகளின் அவசியத்தை மதிக்கின்றனர் என்று கூறியுள்ளனர். Covid-19 கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் வேலைகள் ஊழியர்களுக்கு இருப்பதால் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

உணவகங்களில் சில வாடிக்கையாளர்கள் தங்களது இனவெறியை வெளிப்படுத்துவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சில வாடிக்கையாளர்கள் இந்தியா மற்றும் சிரிய ஊழியர்களிடையே கடுமையாக நடந்து கொள்வதை அடிக்கடி காணமுடிகிறது. தடுப்பூசி ஆதாரத்தை வாடிக்கையாளர்களிடம் கேட்கும்போது கடும் கோபத்தையும், துன்புறுத்தும் வார்த்தைகளையும் வெளிப்படுத்துகின்றனர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் covid-19 தடுப்பூசி மருந்து பெற்றிருந்த நபரை உணவகத்திற்குள் அனுமதிக்கவில்லை. ஏனெனில் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை அவர் அறியவில்லை என்று கூறப்படுகிறது